திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா

பெண்களின் கல்விக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப் சாய் திருமண பந்தத்தில் இணைந்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மண்டையோட்டில் குண்டு துளைத்து உயிருக்குப் போராடி வந்த மலாலா, அதிதீவிர சிகிச்சைகளின் பின்னர் உயிர் பிழைத்தார்.

அதனை தொடர்ந்து மீண்டும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் கல்வி தொடர்பில் அதிக கருத்துக்களை வெளியிட்ட மலாலாவுக்கு அவரது 17 வயதிலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்போது 24 வயதாகும் மலாலா, பிரித்தானியாவில் வசித்துவரும் நிலையில், அங்கு இஸ்லாமிய முறைப்படி தான் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டதாக தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் தனது திருமணம் மிகவும் எளியமுறையில் உறவினர்கள் மத்தியில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா
திருமண பந்தத்தில் இணைந்தார் மலாலா

Social Share

Leave a Reply