உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இன்று ஆரம்பம்

Top 8 வீராங்கனைகள் மாத்திரம் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் ஆரம்பமாகிறது.

மெக்சிகோவில் ஆரம்பமாகும் இப்போட்டியானது எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எனினும் இப்போட்டியில் உலகின் No.1 வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி இதிலிருந்து விலகியுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவிருப்பதனால் இப்போட்டியில் பங்கேவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள ஒற்றையர் பிரிவில் வீராங்கனைகள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவிலுள்ள ஏனையவர்களுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.

அந்தவகையில் இன்று இடம்பெறும் தொடக்க நாள் போட்டியில் கிரிஞ்சிகோவா – கோண்டாவெய்ட் மற்றும் பிளிஸ்கோவா – கோர்பின் முகுருகா ஆகியோர் மோதவுள்ளனர்.

உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இன்று ஆரம்பம்

Social Share

Leave a Reply