முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை யாரவது மாற்ற சொல்லி அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து அதனை நிரூபிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று(03.10) பாரளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
பாரளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரோடா லக்ஷ்மன் கிரியெல்ல நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே இந்த கருத்தை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
நீதித்துறையில் அரசாங்கம் தலையிட முடியாது. அத்தோடு இந்த சம்பவத்தை விசாரிக்க அரசாங்கதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு அழுத்தம் வழங்கியிருந்தால் நாட்டை விட்டு வெளியேறி முறையிடக் கூடாது. மாறாக இங்கேயிருந்து சட்டத்தின் மூலம் அதனை செய்திருக்க வேண்டும். மனு அனுப்பி சம்மந்தப்பட்டவர்களை நீதிமன்றத்துக்கு அழைக்க அல்லது கைது செய்ய அவருக்கு அதிகாரமுள்ளது. அவர் வழக்கை எடுத்து குற்றவாளியை தண்டிக்க அதிகரமுண்டு. அல்லது உயர் நீதிமன்றத்துக்கு முறையியிடலாம். அவர் தனது அதிகாரங்களை பாவிக்கவிட்டால் அவரே பொறுப்பேற்க்க வேண்டும் என மேலும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் நீந்திச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் “தனக்கு அச்சுறுத்தல் இருப்பதனால் அழுத்தம் காரணமாக பதவி விலகுகிறேன்” என அறிவித்துள்ளார் என கூறியுள்ளார்.