தஸூன் சாணக்கவிற்கு உபாதை
இலங்கை அணி உலகக்கிண்ண தொடரின் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் தஸூன் சாணக்க விளையாடவில்லை என இலங்கை கிரிக்கெட் ஊடக முகாமையாளர் பிரசன்ன ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் அணியோடு நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இடதுகர முழங்கையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் ஓய்வை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவருக்கு வைத்தியம் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போட்டியில் உபாதையடைந்த குஷல் பெரேராவுக்கு வைத்தியம் செய்யப்பட்டு அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உபாதை காரணமாக அணியோடு பயணிக்காமல் இலங்கையில் தங்கியிருக்கும் மகீஷ் தீக்ஷண நான்காம் திகதி அணியோடு இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடிப்பாடி வருகிறது.