பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – பொலிசார் பலி!
கறுவாத்தோட்டம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது நேற்று(05.10) மாலை சொகுசு காரொன்று மோதியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06.10) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு சுதந்திர சதுக்க பாதைக்கு அருகில் உள்ள சுற்றுவட்டத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
25 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விபத்து காரணமாக மூளையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.