கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இன்று (06.10) கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் மீது பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொள்ளுப்பிட்டி ஊடான டூப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பலர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.