பாகிஸ்தானுக்கு சவால் வழங்கிய நெதர்லாந்து

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

பாகிஸ்தான் அணி முதல் மூன்று விக்கெட்களையும் வேகமாக இழந்து தடுமாறியது. 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலைமை உருவானது. 120 ஓட்டங்களை மொஹம்மட் ரிஷ்வான், சோட் ஷகீல் ஆகியோர் பெற்று அணியினை மீட்டு எடுத்தனர். அதன் பின்னர் மொஹமட் நவாஸ், ஷதாப் கான் ஆகியோரின் இணைப்பாட்டம் பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்திக்கொடுத்தது.

பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

நெதர்லாந்து அணி பந்துவீச்சில் சிறப்பாகவே செயற்பட்டது. இந்த போட்டி நடைபெறும் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதக தன்மை வழங்கக்கூடிய ஆடுகளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்திலும் தடுமாறும் நிலை ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பஸ் டி லீட் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் நெதர்லாந்து அணி உலகக்கிண்ண தொடரில் விளையாடுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஃபகார் ஷமான்பிடி – லோகன் வன் பீக்லோகன் வன் பீக்121530
இமாம் உல் ஹக்பிடி – ஆர்யன் டட்போல் வான் மீகெரென்151920
பபர் அசாம்பிடி – ஷகிப் சுல்பிகார்கொலின் அக்கர்மன்051800
மொஹமட்  ரிஸ்வான்Boweldபஸ் டி லீட்687580
சவுத் ஷகீல்பிடி – ஷகிப் சுல்பிகார்ஆர்யன் டட்685291
இப்திகார் அகமட்பிடி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ்பஸ் டி லீட்091110
மொஹமட் நவாஸ்Run Out 394340
ஷதாப் கான்Boweldபஸ் டி லீட்323421
ஹசன் அலிL.B.Wபஸ் டி லீட்000100
ஷஹீன் அப்ரிடி.  131220
ஹரிஸ் ரவூப்Stumpedகொலின் அக்கர்மன்161421
உதிரிகள்  09   
ஓவர்  49விக்கெட்  10மொத்தம்286   

பந்துவீச்சாளர்
ஓ.ஓட்டவிக்
ஆர்யன் டட்10004801
லோகன் வன் பீக்06003001
கொலின் அக்கர்மன்08013902
போல் வான் மீகெரென்06004001
பஸ் டி லீட்09006204
ரோலோஃப் வன் டெர் மேர்வ்06003600
விக்ரம் சிங்02001600
ஷகிப் சுல்பிகார்02001500

அணி விபரம்

நெதர்லாந்து அணி: ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், ஷகிப் சுல்பிகார்.

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.

Social Share

Leave a Reply