உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
பாகிஸ்தான் அணி முதல் மூன்று விக்கெட்களையும் வேகமாக இழந்து தடுமாறியது. 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலைமை உருவானது. 120 ஓட்டங்களை மொஹம்மட் ரிஷ்வான், சோட் ஷகீல் ஆகியோர் பெற்று அணியினை மீட்டு எடுத்தனர். அதன் பின்னர் மொஹமட் நவாஸ், ஷதாப் கான் ஆகியோரின் இணைப்பாட்டம் பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்திக்கொடுத்தது.
பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.
நெதர்லாந்து அணி பந்துவீச்சில் சிறப்பாகவே செயற்பட்டது. இந்த போட்டி நடைபெறும் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதக தன்மை வழங்கக்கூடிய ஆடுகளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்திலும் தடுமாறும் நிலை ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
பஸ் டி லீட் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்.
2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் நெதர்லாந்து அணி உலகக்கிண்ண தொடரில் விளையாடுகிறது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஃபகார் ஷமான் | பிடி – லோகன் வன் பீக் | லோகன் வன் பீக் | 12 | 15 | 3 | 0 |
| இமாம் உல் ஹக் | பிடி – ஆர்யன் டட் | போல் வான் மீகெரென் | 15 | 19 | 2 | 0 |
| பபர் அசாம் | பிடி – ஷகிப் சுல்பிகார் | கொலின் அக்கர்மன் | 05 | 18 | 0 | 0 |
| மொஹமட் ரிஸ்வான் | Boweld | பஸ் டி லீட் | 68 | 75 | 8 | 0 |
| சவுத் ஷகீல் | பிடி – ஷகிப் சுல்பிகார் | ஆர்யன் டட் | 68 | 52 | 9 | 1 |
| இப்திகார் அகமட் | பிடி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | பஸ் டி லீட் | 09 | 11 | 1 | 0 |
| மொஹமட் நவாஸ் | Run Out | 39 | 43 | 4 | 0 | |
| ஷதாப் கான் | Boweld | பஸ் டி லீட் | 32 | 34 | 2 | 1 |
| ஹசன் அலி | L.B.W | பஸ் டி லீட் | 00 | 01 | 0 | 0 |
| ஷஹீன் அப்ரிடி. | 13 | 12 | 2 | 0 | ||
| ஹரிஸ் ரவூப் | Stumped | கொலின் அக்கர்மன் | 16 | 14 | 2 | 1 |
| உதிரிகள் | 09 | |||||
| ஓவர் 49 | விக்கெட் 10 | மொத்தம் | 286 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஆர்யன் டட் | 10 | 00 | 48 | 01 |
| லோகன் வன் பீக் | 06 | 00 | 30 | 01 |
| கொலின் அக்கர்மன் | 08 | 01 | 39 | 02 |
| போல் வான் மீகெரென் | 06 | 00 | 40 | 01 |
| பஸ் டி லீட் | 09 | 00 | 62 | 04 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 06 | 00 | 36 | 00 |
| விக்ரம் சிங் | 02 | 00 | 16 | 00 |
| ஷகிப் சுல்பிகார் | 02 | 00 | 15 | 00 |
அணி விபரம்
நெதர்லாந்து அணி: ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், ஷகிப் சுல்பிகார்.
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.