சர்வதேசக் கிரிக்கெட் பேரவை உலகக்கிண்ண தொடரின் மூன்றாம் நாளின் முதற் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் முதற் தடவையாக உலகக்கிண்ண தொடரில் இன்றே சந்தித்திருந்தன.
இந்தியா, தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்த்தில் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திய போதும் பங்களாதேஷ் அணியின் சிறந்த பந்துவீச்சு மூலம் தடுமாறி விக்கெட்களை இழந்ததன் மூலம் போராடக்கூடிய நிலையை அடையமுடியவில்லை.
முதல் விக்கெட் 47 ஓட்டங்களிலும், இரண்டாவது விக்கெட் 87 ஓட்டங்களிலும் வீழ்த்தப்பட்ட நிலையில் 152 ஓட்டங்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் 37.2 ஓவர்களில் வீழ்ந்தது. ஷகிப் அல் ஹசன் ஆரம்பமா முதலே சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றினார். மெஹதி ஹசன் மிர்ஸாவும் சிறப்பாக பந்துவீசினார்கள். இறுதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்ற சகலரது பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 34.4 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. முதலிரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், மெஹதி ஹசன் மிராஸ், நஜிமுல் ஹொசைன் சான்டோ ஆகியோர் நல்ல இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி வெற்றியை இலகுபடுத்தினர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரன்ஷித் ஹசன் தமீம் | Run Out | 05 | 13 | 1 | 0 | |
| லிட்டொன் டாஸ் | Bowled | பஷால்ஹக் பரூக்கி | 13 | 18 | 2 | 0 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | பிடி- ரஹ்மத் ஷா | நவீன் உல் ஹக் | 57 | 73 | 5 | 0 |
| நஜ்முல் ஹொசைன் சாண்டோ | 59 | 83 | 3 | 1 | ||
| ஷகிப் அல் ஹசன் | பிடி -பஷால்ஹக் பரூக்கி | அஸ்மதுல்லா ஓமர்சாய் | 14 | 19 | 2 | 0 |
| முஷ்பிகுர் ரஹீம் | 02 | 03 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 34.4 | விக்கெட் 04 | மொத்தம் | 158 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பஷால்ஹக் பரூக்கி | 05 | 00 | 19 | 01 |
| முஜீப் உர் ரஹ்மான் | 07 | 00 | 30 | 00 |
| நவீன் உல் ஹக் | 5.4 | 00 | 31 | 01 |
| ரஷீட் கான் | 09 | 00 | 48 | 00 |
| மொஹமட் நபி | 06 | 01 | 18 | 00 |
| அஸ்மதுல்லா ஓமர்சாய் | 02 | 00 | 09 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுல்லா குர்பாஸ் | பிடி – ரன்ஷித் ஹசன் | முஸ்ரபைசூர் ரஹ்மான் | 47 | 62 | 4 | 1 |
| இப்ராஹிம் ஷர்டான் | பிடி – ரன்ஷித் ஹசன் | ஷகிப் அல் ஹசன் | 22 | 25 | 3 | 1 |
| ரஹ்மத் ஷா | பிடி- லிட்டொன் டாஸ் | ஷகிப் அல் ஹசன் | 18 | 25 | 1 | 0 |
| ஹஷ்மதுல்லா ஷஹிதி | பிடி- தௌஹித் ரிடோய் | மெஹிதி ஹசன் மிராஸ் | 18 | 38 | 2 | 0 |
| நஜிபுல்லா ஷர்டான் | Bowled | ஷகிப் அல் ஹசன் | 05 | 13 | 0 | 0 |
| மொஹமட் நபி | Bowled | ரஸ்கின் அஹமட் | 06 | 12 | 0 | 0 |
| அஸ்மதுல்லா ஓமர்சாய் | Bowled | ஷொரிஃபுல் இஸ்லாம் | 22 | 20 | 4 | 0 |
| ரஷீட் கான் | Bowled | மெஹிதி ஹசன் மிராஸ் | 09 | 06 | 1 | 0 |
| முஜீப் உர் ரஹ்மான் | Bowled | மெஹிதி ஹசன் மிராஸ் | 01 | 04 | 0 | 0 |
| நவீன் உல் ஹக் | பிடி- தௌஹித் ரிடோய் | ஷொரிஃபுல் இஸ்லாம் | 00 | 06 | 0 | 0 |
| பஷால்ஹக் பரூக்கி | 00 | 03 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 37.2 | விக்கெட் 10 | மொத்தம் | 156 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ரஸ்கின் அஹமட் | 06 | 00 | 32 | 01 |
| ஷொரிஃபுல் இஸ்லாம் | 6.2 | 01 | 34 | 02 |
| முஸ்ரபைசூர் ரஹ்மான், | 07 | 01 | 28 | 01 |
| ஷகிப் அல் ஹசன் | 08 | 00 | 30 | 03 |
| மெஹிதி ஹசன் மிராஸ் | 09 | 03 | 25 | 03 |
| மஹ்முதுல்லா | 01 | 00 | 01 | 00 |
அணி விபரம்
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா சுர்மதி, நஜிபுல்லா ஷர்டான், முகமது நபி எய்சகில், அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், அஹமட் லகன்வாய், நவீன் உல் ஹக் முரீத், பஷால்ஹக் பரூக்கி
பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன் (தலைவர்), லிட்டொன் டாஸ், ரன்ஷித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ததௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், ரஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான்,ஷொரிஃபுல் இஸ்லாம்