தொழுநோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல்!

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 9 மாதங்கள் முதல் இந்த நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பிலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்களுள் 18% நோயாளர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply