இந்தியா, பாகிஸ்தான் மோதல் ஆரம்பம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பன்னிரண்டாவது போட்டி ஆரம்பித்துள்ளது.

இந்தியா, அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

கிரிக்கெட்டின் பரம வைரிகளான இந்தியா பாகிஸ்தான் மோதலை உலகமே எதிர்பார்த்து கார்த்திருக்கிறது. இது வழமை. அதிலும் உலகக்கிண்ணம் என வரும் போது இந்த அணிகளது மோதல் மேலும் விறு விறுப்பை தரும்.

இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரில் ஏழு தடவைகள் மோதியுள்ளன. ஏழு தடவைகளும் இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை இந்தியாவில் போட்டி நடைபெறும் நிலையில் இந்தியா அணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் என்ற எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் இந்தப் போட்டியின் முடிவு யாருக்கு அதிக வாய்ப்பு என்பதனை உறுதி செய்யும்.

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
நியூசிலாந்து03030000061.604
தென்னாபிரிக்கா02020000042.360
இந்தியா02020000041.500
பாகிஸ்தான்02020000040.927
இங்கிலாந்து02010100020.553
பங்களாதேஷ்0301020002-0.699
இலங்கை0200020000-1.161
நெதர்லாந்து0200020000-1.800
அவுஸ்திரேலியா0200020000-1.846
ஆப்கானிஸ்தான்0200020000-1.907

Social Share

Leave a Reply