வீதியை விட்டு விலகி பஸ் விபத்து – 15 பேர் காயம்!

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (18.10) மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஏ9 வீதியின் 105வது மற்றும் 106 வது கிலோமீற்றர்களுக்கு இடைப்பட்ட வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் படுகாயமடைந்து மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் வேகத்தை கட்டுப்படுத்த இயலாமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், பேருந்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

Social Share

Leave a Reply