முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில் அவரது அலுவலகத்தில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
2022 ஜூலை மாதம் 9ம் திகதியன்று இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணைக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு இன்று (18) கோட்டை நீதவானிடம் அறிவித்தது.