நச்சுப் புகையை சுவாசித்த சிலர் வைத்தியசாலையில் அனுமதி!

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஜவுளி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து தலவாக்கலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின்போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளை, ​​கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகையின் காரணமாக, நிறுவன ஊழியர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply