நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை – மருந்துகளை வழங்குவதில் சிக்கல்!

நாட்டில் நிலவும் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்துகளை விநியோகிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகமான வைத்தியசாலைகளுக்கு இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக மருந்தாளுநர்கள் பலர் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக மருந்தாளுநர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மருந்தாளுநர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சின் அனுமதி ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply