
இலங்கை நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலககிண்ணத்தொடரின் பத்தொன்பதாவது போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்களினால் வெற்றி வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
263 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பம் முதல் விக்கெட்களை சம இடைவெளிகளில் இழந்தது. இன்று இலங்கை அணிக்கு நல்ல ஆரம்பம் கிடைக்கவில்லை. பத்தும் நிஸ்ஸங்க அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் சதீர சமரவிக்ரம அரைச்சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். நிஸ்ஸங்க ஆட்டமிழந்ததும் சதீர தொடர்ந்து நிதானமாக துடுப்பாடினார். அவரும் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க ஆகியோர் நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தளித்த போது சரித் அசலங்க ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு நெருக்கடியான நிலை உருவாகியது.
48.2 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சு நெதர்லாந்து அணியின் விக்கெட்களை தகர்த்து ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியது. இந்தப்போட்டிக்காக அழைக்கப்பட்டிருந்த கஸூன் ரஜித நெதர்லாந்து அணியின் முக்கியமான விக்கெட்களை ஆரம்பத்தில் கைப்பற்றினார். டில்ஷான் மதுஷங்கவும் முன்வரிசை விக்கெட்களைக் கைப்பற்றினார். 7ஆம் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட், லோகன் வன் பீக் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்து நெதர்லாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்திக்கொடுத்தனர். அதன் அவர்களது 130 ஓட்ட இணைப்பாட்டம் நெதர்லாந்து அணிக்கு பலமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் அவரது முதலாவது ஒரு நாள் சர்வதேச அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். லோகன் வன் பீக் இறுதி வரை போராடி ஓட்டங்களை பெற்றார். அவரது ஓட்டங்கள் நெதர்லாந்து அணிக்கு மேலும் பல சேர்த்து.
இலங்கை அணி ஆரம்பத்தில் வேகமாக விக்கெட்களை கைப்பற்றிய போதும் இறுதி நேர விக்கெட்களை தகர்க்க முடியாமல் போனது இலங்கை அணிக்கு கடினமான நிலையை உருவாக்காகியது.
பந்துவீச்சில் கஸூன் ரஜிதவின் ஒரு ஓவர் பாவிக்கப்படவில்லை. இன்று சிறப்பாக பந்துவீசிய ஒருவரது ஒரு ஓவர் பாவிக்கப்படாதது மிகப் பெரிய தவறு. தலைவர் குஷல் மென்டிஸ் இதனை ஏன் கவனிக்கவில்லை? இவ்வாறன தவறுகள் அணிக்கு பின்னடைவை தரும். இதனை தலைவர் கவனித்திருக்க வேண்டும்.
நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் சகல 08 விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி- ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | போல் வன் மீகெரென் | 54 | 52 | 9 | 0 |
| குசல் பெரேரா | பிடி- பஸ் ட லீட் | ஆர்யன் டட் | 05 | 08 | 1 | 0 |
| குஷல் மென்டிஸ் | பிடி- போல் வன் மீகெரென் | ஆர்யன் டட் | 11 | 17 | 2 | 0 |
| சதீர சமரவிக்ரம | 91 | 107 | 7 | 0 | ||
| சரித் அசலங்க | Bowled | ஆர்யன் டட் | 44 | 66 | 2 | 1 |
| தனஞ்சய டி சில்வா | Bowled | கொலின் அக்கர்மன் | 30 | 37 | 1 | 2 |
| டுஷான் ஹேமந்த | 04 | 03 | 1 | 0 | ||
| உதிரிகள் | 24 | |||||
| ஓவர் 48.2 | விக்கெட் 05 | மொத்தம் | 263 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஆர்யன் டட் | 10 | 00 | 44 | 03 |
| லோகன் வன் பீக் | 10 | 00 | 57 | 00 |
| போல் வன் மீகெரென் | 08 | 01 | 39 | 01 |
| பஸ் ட லீட் | 03 | 00 | 29 | 00 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | 09 | 00 | 42 | 00 |
| கொலின் அக்கர்மன் | 8.2 | 00 | 39 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| விக்ரம் சிங் | L.B.W | கஸூன் ரஜித | 04 | 13 | 1 | 0 |
| மக்ஸ் ஓ டொவ்ட் | Bowled | கஸூன் ரஜித | 16 | 27 | 1 | 1 |
| கொலின் அக்கர்மன் | பிடி – குஷல் மென்டிஸ் | கஸூன் ரஜித | 29 | 31 | 5 | 0 |
| பஸ் டி லீட் | பிடி – குசல் பெரேரா | டில்ஷான் மதுஷங்க | 06 | 21 | 0 | 0 |
| தேஜா நிடமனுரு | L.B.W | டில்ஷான் மதுஷங்க | 09 | 16 | 0 | 0 |
| ஸ்கொட் எட்வேர்ட்ஸ் | Bowled | மஹீஸ் தீக்ஷண | 16 | 16 | 0 | 0 |
| சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் | Bowled | டில்ஷான் மதுஷங்க | 70 | 82 | 4 | 1 |
| லோகன் வன் பீக் | பிடி – சரித் அசலங்க | கஸூன் ரஜித | 59 | 75 | 1 | 1 |
| ரோலோஃப் வன் டெர் மேர்வ் | பிடி – குஷல் மென்டிஸ் | டில்ஷான் மதுஷங்க | 07 | 07 | 0 | 0 |
| ஆர்யன் டட் | 09 | 06 | 1 | 0 | ||
| போல் வன் மீகெரென் | Run Out | 04 | 05 | 0 | 0 | |
| உதிரிகள் | 33 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 10 | மொத்தம் | 262 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டில்ஷான் மதுஷங்க | 9.4 | 01 | 49 | 01 |
| கஸூன் ரஜித | 09 | 00 | 50 | 04 |
| சாமிக்க கருணாரட்ன | 09 | 01 | 58 | 00 |
| மஹீஸ் தீக்ஷண | 10 | 00 | 44 | 01 |
| டுஷான் ஹேமந்த | 08 | 00 | 42 | 00 |
| தனஞ்சய டி சில்வா | 04 | 00 | 13 | 00 |
அணி விபரம்
நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்
இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, சாமிக்க கருணாரட்ன, டுஷான் ஹேமந்த, கஸூன் ரஜித
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| நியூசிலாந்து | 04 | 04 | 00 | 00 | 08 | 1.923 |
| இந்தியா | 04 | 04 | 00 | 00 | 08 | 1.659 |
| தென்னாபிரிக்கா | 03 | 02 | 01 | 00 | 04 | 1.385 |
| அவுஸ்திரேலியா | 04 | 02 | 02 | 00 | 04 | -0.193 |
| பாகிஸ்தான் | 04 | 02 | 02 | 00 | 04 | -0.456 |
| இங்கிலாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.084 |
| பங்களாதேஷ் | 04 | 01 | 03 | 00 | 02 | -0.784 |
| நெதர்லாந்து | 04 | 01 | 03 | 00 | 02 | -0.790 |
| இலங்கை | 04 | 01 | 03 | 00 | 00 | -1.048 |
| ஆப்கானிஸ்தான் | 04 | 01 | 03 | 00 | 02 | -1.250 |