இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி நிகழ்த்திய தென்னாபிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி நிகழ்த்திய தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 20 ஆவது போட்டி மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

தென்னாபிரிக்கா முதல் விக்கெட்டினை வேகமாக இழந்த போதும் இன்றைய போட்டிக்கு சேர்க்கபப்ட்ட ரீஷா ஹென்றிக்ஸ் சிறப்பாக துடுப்பாடி நல்ல ஆரம்பத்தை வழங்கினார். அவரோடு ரஸ்ஸி வன் டேர் டுஸ்ஸன் இணைந்து 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ஹெய்ன்ரிச் கிளாசன், மார்கோ ஜன்சன் ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். ஹெய்ன்ரிச் கிளாசன்அதிரடியாக துடுப்பாடி 61 ஒரு பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். மார்கோ மார்கோ ஜன்சன் அவரது உலககிண்ணத்தில் முதலாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். இது மூலமாக தென்னாபிரிக்கா அணியின் ஓட்ட எண்ணிக்கை 400 ஓட்டங்களை தொட்டது.

தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றது. இந்த வெற்றியிலக்கை துரத்தியடிப்பது இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாகும்.

இங்கிலாந்து அணி நடுப்பகுதியில் இறுக்கம் ஒன்றை வழங்கியது. தென்னாபிரிக்கா அணி அடுத்தடுத்து சிறிய இடைவேளைகளில் விக்கெட்களை இழந்தது. அதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கை குறைந்தது.

தென்னாபிரிக்கா அணி 2 வெற்றிகளைப் பெற்று இறுதியாக நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணி 2 தோல்விகளை அடைந்து பங்களாதேஷ் அணியை வென்றுள்ளது. ஆப்கானிஸ்தானிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. இரண்டு அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இரு அணிகளும் மோதும் போட்டி இது. இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இது.

தென்னாபிரிக்கா அணியின் தலைவர் ரெம்பா பவுமா சுகயீனம் காரணமாக இன்று விளையாடவில்லை. எய்டன் மார்க்ராம் அணி தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். ரீஷா ஹென்றிக்ஸ் அணியில் இடம்பிடித்துளார்.

இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்ஷன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். க்றிஸ் வோக்ஸ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், ஹரி புரூக், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், ரீஸ் ரொப்லி, மார்க் வூட், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்ஷன்

தென்னாபிரிக்கா அணி: ரீஷா ஹென்றிக்ஸ் குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம்(தலைவர்), டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்பிடி – ஜோஸ் பட்லர்ரீஸ் ரொப்லி040210
ரீஷா ஹென்றிக்ஸ் Bowledஆடில் ரஷிட்857593
ரஷி வன் டேர் டுசென்பிடி – ஜோனி பார்ஸ்டோவ்ஆடில் ரஷிட்606180
எய்டன் மார்க்ரம்பிடி – ஜோனி பார்ஸ்டோவ்ரீஸ் ரொப்லி424440
ஹெய்ன்ரிச் கிளாசன் Bowled கஸ் அட்கின்ஷன்109 67 12 
டேவிட் மில்லர்பிடி – பென் ஸ்டோக்ஸ்ரீஸ் ரொப்லி050610
மார்கோ ஜன்சன்   7542 
ஜெரால்ட் கோட்ஸிலி பிடி – லியாம் லிவிங்ஸ்டன் கஸ் அட்கின்ஷன் 0303 
கேசவ் மகராஜ்   0101 
      
      
உதிரிகள்  15   
ஓவர்  50விக்கெட்  07மொத்தம்399   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ரீஸ் ரொப்லி8.5008803
டேவிட்  வில்லி09016100
ஜோ ரூட்6.1004800
கஸ் அட்கின்ஷன்0900 6002 
மார்க் வூட்07007600
ஆடில் ரஷிட்10006102
     

Social Share

Leave a Reply