பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (23.10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததுள்ளது.

இந்த உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி 2 போட்டிகளில் தோல்வியினை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வி என்ற நிலையில் காணப்படுகிறது.

பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வதற்கு இன்றைய போட்டி மிக முக்கியமாக அமைகிறது.

இரு அணிகளும் ஒவ்வொரு மாற்றங்கலுடன் விளையாடுகின்றன. பாகிஸ்தான் அணி மொஹமட் நவாஸிற்கு பதிலாக ஷதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி பஷால்ஹக் பரூக்கியிற்கு பதிலாக நூர் அஹமட் விளையாடுகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் 4 சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடுகிறார்கள்.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்

புள்ளிப்பட்டியல்

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா05050000101.353
நியூசிலாந்து05040100081.481
தென்னாபிரிக்கா04030100062.212
அவுஸ்திரேலியா0402020004-0.193
பாகிஸ்தான்0402020004-0.456
பங்களாதேஷ்0401030002-0.784
நெதர்லாந்து0401030002-0.790
இலங்கை0401030000-1.048
இங்கிலாந்து0401020002-1.248
ஆப்கானிஸ்தான்0401030002-1.250

Social Share

Leave a Reply