க.பொ.த சாதாரணதர பரீட்சையின் (2022/23) பெறுபேறுகளை நவம்பர் மாத இறுதியில் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணியின் கீழ் சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் தரவுகள் கணினி மயமாக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.