இன்று (27.10) காலை 09.30 மணியளவில் கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினால் 06 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன், மேலும் பல கடைகளும் இதனால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.