தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 26 ஆவது போட்டி ஆரம்பமாகியுள்ளது. இரண்டு வெற்றிகளோடு ஆரம்பித்த பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது.

இரண்டாமிட தென்னாபிரிக்கா அணிக்கும், ஆறாமிட பாகிஸ்தான் அணிக்குமிடையிலான போட்டி இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றால், அரை இறுதி வாய்ப்பு அவர்களுக்குக் இலகுவாகும். பாகிஸ்தான் அணி தோல்வியடையும் நிலையில் அவர்களுக்கு அரை இறுதி வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம்.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்துள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான்

தென்னாபிரிக்கா அணி: ரீஷா ஹென்றிக்ஸ் குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம்(தலைவர்), டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி

Social Share

Leave a Reply