இந்தியா, இங்கிலாந்து போட்டி ஆரம்பம்

இந்தியா, இங்கிலாந்து போட்டி ஆரம்பம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 29 ஆவது போட்டியாக லக்னோவில் இன்று (29.10) ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்தியா அணி விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் 1 வெற்றி 4 தோல்விகள் என்ற நிலையில் இறுதியிடத்திலும் காணப்படுகின்றன.

அணி விபரம்

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், மொயின் அலி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி

Social Share

Leave a Reply