ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகரை கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யாசகரை தீ வைத்து கொலை செய்யுதள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கிருந்த, அயலவர்கள் யாசகரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30.10) காலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மதாச எனும் 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன்,
ஹோமாகம, கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இந்தக் கொலையைச் செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.