நாடு பூராகவும் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த திட்டம்!

எதிர்வரும் 6 மாதங்களில் நாடு பூராகவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் இந்நாட்டில் குற்றச்செயல்களை முன்னெடுப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அண்மைய நாட்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக தென் மாகாணத்தில் பல குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவை அனைத்தும் வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் வழிநடத்தப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply