
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 30 ஆவது போட்டியாக பூனேயில் இன்று (30.10) ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளுடன் ஐந்தாம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணியும் 5 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளுடன் ஏழாமிடத்திலும் காணப்படுகின்றன.
இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் இன்று விளையாடுகிறது. குசல் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரட்னவும் லஹிரு குமார உபாதை அடைந்த காரணத்தால் அவருக்கு பதிலாக துஷ்மந்த சமீரவும் விளையாடுகினறனர். ஆப்கானிஸ்தான் அணி ஒரு மாற்றத்தோடு விளையாடுகிறது. நூர் அஹமட்டிற்கு பதிலாக பசல்ஹக் பரூக்கி மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.
அணி விபரம்
இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), திமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| இந்தியா | 06 | 06 | 00 | 00 | 12 | 1.405 |
| தென்னாபிரிக்கா | 06 | 05 | 01 | 00 | 10 | 2.032 |
| நியூசிலாந்து | 06 | 04 | 02 | 00 | 08 | 1.232 |
| அவுஸ்திரேலியா | 06 | 04 | 02 | 00 | 08 | 0.970 |
| இலங்கை | 05 | 02 | 03 | 00 | 04 | -0.205 |
| பாகிஸ்தான் | 06 | 02 | 04 | 00 | 04 | -0.387 |
| ஆப்கானிஸ்தான் | 05 | 02 | 03 | 00 | 04 | -0.969 |
| நெதர்லாந்து | 06 | 02 | 04 | 00 | 04 | -1.277 |
| பங்களாதேஷ் | 06 | 01 | 05 | 00 | 02 | -1.338 |
| இங்கிலாந்து | 06 | 01 | 05 | 00 | 02 | -1.652 |