ஹொரணையில் விபத்து – பாடசாலை மாணவர்கள் சிலர் காயம்!

ஹொரணையில் இருந்து மஹரகம செல்லும் வீதியில் இன்று (03.11) இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணையில் இருந்து மஹரகம நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தும், ஹொரணையில் இருந்து உடுவை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply