இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையை நீக்குவது தொடர்பிலான சட்டமூலத்தை பாரளுமன்றத்தில் நாளை(09.11) சமர்ப்பிப்பதற்கு கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
225 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக சபையினை நீக்க ஆதரவு வழங்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தாம் சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறைவற்றுக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோர் கலந்திருக்கவில்லை.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரச்சினைகள் தொடர்பில் இன்று விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுன்றத்தில் நீண்ட உரையாற்றியிருந்தார். இதில் ஜனாதிபதி ரொஷான் ரணசிங்க தேவையா அல்லது பந்தயக்காரன் ஷம்மி சில்வா வேண்டுமா என முடிவு எடுக்கட்டட்டும் எனவும் தனது உரையில் கூறியுள்ளார்.