போர் நிறைவடைந்து 14 ஆண்டுகள் தாண்டியும் வடக்கு கிழக்கின் தொன்மையான நகரமான யாழ்பாணத்திலோ, கிழக்கிலோ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்காமல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தட்டிக்கழித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் H.M.M ஹரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக வடக்கு கிழக்கு தமிழ் வீரர்கள் தேசிய அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுளளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அம்பாறை கிரிக்கெட் சம்மேளனத்தின் முறைகேடான நடவடிக்கைகள் காரணமாகவும், ஒரு மாபிவியாக 20-30 வருடங்களாக நடாத்தி வருவதாகவும், பல கழகங்கள் காணப்பட்ட போதிலும் நுட்பமான முறையில் அவர்களுக்கு வாக்களிப்பு வாய்ப்பை மறுத்து செயற்பட்டு வருவதாகவும் H.M.M ஹரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் மக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக சபை விலகவேண்டும் எனவும் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மேலும்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்து இலங்கை அணியில் விளையாடி வரும் வியாஸ்கந்த, கட்டார் தேசிய அணியில் விளையாடி வரும் அஹனாப் தொடர்பிலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.