பனை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இவ்வருடம் 78 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்ந உற்பத்திகளுக்கு கனேடிய சந்தையில் அதிக தேவை காணப்படுவதாகவும் பனை அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பனை தொடர்பான பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கிலும், அவற்றிலிருந்து பொருளாதார நன்மைகளை பெறும் நோக்கிலும், ஆர்வமுள்ளவர்களுக்கு பனை அபிவிருத்தி சபை விசேட பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.
கடந்த 4 வருடங்களுக்குள் இரண்டு இலட்சம் புதிய பனை மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளார்.