இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அபார வெற்றி

இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அபார வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 41 ஆவது போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட்களினால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துட்டுப்படிய இலங்கை அணி சார்பாக குஷல் பெரேரா சிறந்த ஆரம்பத்தை அதிரடியாக வழங்கிய பொதும் இன்றும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்ததும் சென்றதுமாக ஆட்டமிழந்தனர். குஷல் பெரேரா அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். மஹீஸ் தீக்ஷண நீண்ட நேரம் நின்று நிலைத்து துடுப்பாடியதன் காரணமாக அதிக ஓவர்களை இலங்கை அணி எதிர்கொள்ள முடிந்தது. அதன் காரணமாக இலங்கை அணிக்கு ஓட்டங்கள் ஓரளவு அதிகரித்தது.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் இலங்கை அணியின் அணியின் முன் வரிசை விக்கெட்களை கைப்பற்றினார். இறுதி விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.ஏனைய பந்துவீச்சாளர்கள் ஏனைய விக்கெட்களை கைப்பற்ற இலங்கை அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் ஐந்து விக்கெட்கள் 10 ஓவர்களில் வீழ்த்தப்பட்டன. ஏனைய 5 விக்கெட்கள் 36.4 ஓவர்களில் வீழ்த்தப்பட்டன. இதில் இறுதி 2 விக்கெட்கள் 23.1 ஓவர்களில் வீழ்த்தப்பட்டன.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி வந்தது. முதல் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திர, டெவோன் கொன்வே ஆகியோர் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த விக்கெட்டும் வேகமாக வீழ்த்தப்பட்டது. ரச்சின் ரவீந்திர இந்த உலககிண்ணத்தில் அதிக ஓட்டங்களை பெற்றிருக்கிறார்.

இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்று தொடரின் தமக்கான இறுதிப் போட்டிகளில் விளையாடுகின்றன. இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றாலே சம்பியன் கிண்ண தொடருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் விளையாடுகிறனர். நியூசிலாந்து அணி தோல்வியடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலை உள்ளாகலாம். இதன் காரணமாக இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜிதவுக்கு பதிலாக சாமிக்க கருணாரட்ன சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ஐஸ் சோதிக்கு பதிலாக லூக்கி பெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் போட்டியின் முடிவிலும், ஆப்கானிஸ்தான் அணியின் போட்டியின் முடிவிலும் நியூசிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு தங்கியுள்ளது.

இலங்கை அணி இந்த தோல்வியை அடைந்ததன் மூலம் சம்பியன் கிண்ண தொடருக்கு தெரிவு செய்யப்படுவது கடினமான நிலைக்கு சென்றுள்ளது. ஏனைய அணிகளது போட்டிகளின் முடிவ்களிலேயே இலங்கை அணி தகுதி பெறுமா இல்லையா என தெரியவரும்.

நியூசிலாந்து அணி முதல் சுற்றின் 9 போட்டிகளை நிறைவு செய்துள்ள நிலையில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இலங்கை அணி 9 போட்டிகளையும் நிறைவு செய்துள்ள நிலையில் இரண்டு வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளோடு நாடு திரும்புகிறது.

இலங்கை அணி சார்பாக டில்ஷான் மதுசங்க சிறப்பாக பந்துவீசியுள்ளார். இலங்கை அணி போட்டிகளை நிறைவு செய்யும் போது இந்த உலகக்கிண்ணத்தில் கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராக வெளியேறியுள்ளார். 21 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டெவோன் கொன்வேபிடி – தனஞ்சய டி சில்வாதுஷ்மந்த சமீர454290
ரச்சின் ரவீந்திரபிடி – தனஞ்சய டி சில்வாமஹீஸ் தீக்ஷண423433
கேன் வில்லியம்சன்Bowledஅஞ்சலோ மத்தியூஸ்141520
டெரில் மிட்செல்பிடி – சரித் அசலங்கஅஞ்சலோ மத்தியூஸ்433152
மார்க் சப்மன்Run Out 070610
கிளென் பிலிப்ஸ்     
ரொம் லெதாம்      
       
       
       
       
உதிரிகள்  02   
ஓவர்  23.2விக்கெட்  05மொத்தம்172   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்விக்
டில்ஷான் மதுஷங்க6.2005800
மஹீஸ் தீக்ஷண07004301
தனஞ்சய டி சில்வா02002200
துஷ்மந்த சமீர04012001
அஞ்சலோ மத்தியூஸ்04002902
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- ரொம் லெதாம்டிம் சௌதி020800
குஷல் பெரேராபிடி- ரொம் லெதாம்லூக்கி பெர்குசன்512892
குஷல் மென்டிஸ்பிடி- ரச்சின் ரவீந்திரடிரென்ட் போல்ட்060710
சதீர சமரவிக்ரமபிடி- டெரில் மிட்செல்டிரென்ட் போல்ட்010200
சரித் அசலங்கL.B.Wடிரென்ட் போல்ட்080810
அஞ்சலோ மத்தியூஸ்பிடி- டெரில் மிட்செல்மிட்செல் சென்ட்னர்162720
தனஞ்சய டி சில்வாபிடி- டெரில் மிட்செல்மிட்செல் சென்ட்னர்192421
சாமிக்க கருணாரட்னபிடி- ரொம் லெதாம்லூக்கி பெர்குசன்061710
மஹீஸ் தீக்ஷண  399130
துஷ்மந்த சமீரபிடி- டரென்ட் போல்டரச்சின் ரவீந்திர012000
டில்ஷான் மதுஷங்கபிடி- ரொம் லெதாம்ரச்சின் ரவீந்திர194820
உதிரிகள்  03   
ஓவர்  46.4விக்கெட்  10மொத்தம்171   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டரென்ட் போல்ட10033703
டிம் சௌதி05004301
லூக்கி பெர்குசன்10023502
மிட்செல் சென்ட்னர்10022202
ரச்சின் ரவீந்திர7.4002202
கிளென் பிலிப்ஸ்01000300
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா08080000162.456
தென்னாபிரிக்கா08060200121.376
அவுஸ்திரேலியா08060200120.861
நியூசிலாந்து09050400100.743
பாகிஸ்தான்08040400080.036
ஆப்கானிஸ்தான்0804040008-0.338
இங்கிலாந்து0802060004-0.885
பங்களாதேஷ்0802060004-1.442
இலங்கை0902070004-1.419
நெதர்லாந்து0802050004-1.635

அணி விபரம்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, சாமிக்க கருணாரட்ன

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (தலைவர்), டெவோன் கொன்வே, மார்க் சப்மன், ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர், டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், டிம் சௌதி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version