இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான 5,70,000 போதை மாத்திரைகளை கல்பிட்டி இரணைதீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி கடற்படை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
நீர் கசிவு ஏற்படாதவாறு 10 பெட்டிகளில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருந்ததாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.