24/7 சேவையில் ஈடுபடவுள்ள தபால் நிலையங்கள் குறித்து அறிவிப்பு!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை முன்னெடுக்க கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய பதின்மூன்று தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு (வடக்கு, தெற்கு, மத்திய), நுகேகொட, கல்கிசை, களுத்துறை, சீதாவகபுர, களனி, மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் உள்ள பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்களில் இதை முன்னோடித் திட்டமாக ஒமுன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

கொம்பனி வீதி, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பொரளை, கொட்டாஞ்சேனை, பத்தரமுல்ல, நுகேகொட, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை மற்றும் சீதாவகபுர போன்ற குறிப்பிட்ட தபால் நிலையங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும்அபராதங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை இவ்வாறு முன்னெடுக்கவுள்ளன.

இந்த சேவையை மேலும் எளிதாக்க தபால் துறை காவல்துறையுடன்இணைத்து செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்குகலின்போது, இந்த முயற்சி குறித்து வாகன சாரதிகளுக்கு தெளிவுபடுத்துமாறு போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply