‘ஈ பில்லிங்’ சேவைக்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை கோரிக்கை!

மின்சார பாவனையாளர்களுக்காக அமுல்படுத்தப்படும் ‘ஈ பில்லிங்’ சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் இணையத்தளமான https://ebill.ceb.lk ஊடாக வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முடியும் எனவும் இல்லையெனில் 1987 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் தமது கையடக்க தொலைபேசியில் REG என பதிவிட்டு, சிறிய இடைவெளி விட்டு மின்சார கணக்கு எண்ணை உள்ளீடு செய்து 1987 க்கு எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பி பதிவு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு ஏற்கனவே ‘ஈ-பில்கள்’ வழங்கப்பட்டு வருவதுடன், அடுத்த சில மாதங்களில் இந்த சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply