”வரவு செலவு திட்டம் சட்ட விரோதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது” – ஹர்ஷ டி சில்வா

இந்த வரவு செலவு திட்டம் சட்ட விரோதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடாமல் வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, அனைத்து சுகாதார உபகரணங்களுக்கும் 18% VAT விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதலில் மூன்று வேளை சாப்பாடு, மருந்து, மின்கட்டணம் இவற்றிற்கு தீர்வு தேட வேண்டும் அதன் பின்னர் ஏனையவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் வறுமை 13% இல் இருந்து 25% ஆக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளதுடன், நம் நாட்டின் மக்கள் தொகையில் 56% அதிகமானோர் ஏழைகள் என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன, இதை கருத்திற்கொள்ளாமல் வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் இந்த நிலைக்கு காரணமான பொருளாதாரக் கொலைகாரர்களின் குடியுரிமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் கருத்து என்ன ரன்பது தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Social Share

Leave a Reply