இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா அணி 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்தியா அணி நான்காவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 1983 மற்றும் 2011 ஆண்டுகளில் சம்பியன். 2003 ஆண்டு இரண்டாமிடம்.
மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்றத இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 397 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி போராடிய போதும் வெற்றியிலக்கை தொட முடியவில்லை. . 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்தியா அணியின் துடுப்பாட்டத்தின் ஆரம்பத்தில் அதிரடி நிகழ்த்தி ரோஹித் ஷர்மா ஓட்டங்களை வேகமாக அதிகரித்து கொடுத்தார். அந்த ஆரம்பத்தை அவர் ஆட்டமிழந்த பின்னர் சுப்மன் கில் தொடர்ந்தார். விராத் கோலி நிதானமாக அவருக்கு இணைப்பாட்டத்தை வழங்கினார். 22.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை பெற்ற நிலையில் சுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். முதல் விக்கெட் இணைப்பட்டாம் 71 ஓட்டங்கள். இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் 93 ஓட்டங்கள். சுப்மன் கில் இறுதி ஓவரில் மீண்டும் ஆடுகளத்துக்கு வருகை தந்து ஒரு பந்தினை எதிர்கொண்டார்.
கில் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவை தரும் என்று எதிர்பார்த்த போதும், ஷ்ரேயாஸ் ஐயர், கோலி இணைப்பாட்டம் மேலும் சிறப்பாக சென்றது. இருவரும் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். கோலி 117 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 163 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது.
விராத் கோலி 80 ஓட்டங்களை பெற்ற வேளையில் உலகக்கிண்ண தொடர் ஒன்றில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவர் என்ற சச்சின் ரெண்டுல்காரின் சாதனையை தாண்டினார். தற்போது ஒரு உலகக்கிண்ண தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவர் விராத் கோலி. 711 ஓட்டங்களை பெற்றுள்ளார். இந்த சாதனையை இந்த உலகக்கிண்ண தொடரில் முறியடிப்படது கடினம். விராத் கோலி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 50 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கு முன்னர் சச்சின் கூடுதலாக 49 சதங்களை பூர்த்தி செய்திருந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆரம்பித்து மிக அதிரடியாக அடித்தாடி தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். கடந்த போட்டியிலும் சதத்தை இவர் பெற்றிருந்தார்.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் முதலிரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்டமை நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை வழங்கியது. இருப்பினும் 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன், டெரில் மிட்செல் ஆகியோர் 181 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த வேளையில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. இதனுள் மொஹமட் ஷமி இலகுவான கேன் வில்லியம்சனின் இலகுவான பிடியை நழுவவிட்டார். முன்னதாக ரன் அவுட் முறையில் அவரை ஆட்டமிழக்க வைக்கக்கூடிய வாய்ப்பு லோகேஷ் ராகுல் பந்தை பிடிக்காமல் விக்கெட்டினை தட்டியமையினால் நழுவவிடப்பட்டது.
இருப்பினும் முதலிரு விக்கெட்களையும் கைப்பற்றிய மொஹமட் ஷமி பந்துவீச்சுக்கு அழைக்கப்பட ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இந்தியா அணி பக்கமாக மீண்டும் வெற்றி வாய்ப்பை வழங்கினார்.கேன் வில்லியம்சன் 45 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலகிண்ணத்தில் 3 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். டெரில் மிட்செல் நிதானமாக ஆரம்பித்து பின்னர் அதிரடியாகவ துடுப்பாடி தொடர்ந்தும் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்திய போதும் மறு பக்கமாக விக்கெட்கள் வீழத்தப்பட வெற்றியினை துரத்தி பெறும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போனது. இன்று தனது 6 ஆவது சதத்தையும் இந்த உலகிண்ணத்தில் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டும் இந்தியா அணிக்கெதிராக பெறப்பட்டவை.
மொஹமட் ஷமியின் அபார பந்துவீச்சு இந்தப் போட்டியின் வெற்றிக்கும் இந்தியா அணிக்கு கைகொடுத்துள்ளது. இந்தியா அணி சார்பாக உலகக்கிண்ண போட்டிகளில் 50 விக்கெட்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளாராக தன் பெயரை பதிவு செய்துள்ளார். இந்த தொடரில் 6 போட்டிகளில் 23 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்த தொடரில் இரண்டாவது தடவையாக ஐந்து விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அத்தோடு கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவராகவும் தனது பெயரை பதிவு செய்துளளர். இந்தியா அணி சார்பாக உலகக்கிண்ண தொடரில் 7 விக்கெட்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்துள்ளார்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
டெவோன் கொன்வே | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் ஷமி | 13 | 15 | 3 | 0 |
ரச்சின் ரவீந்திர | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் ஷமி | 13 | 22 | 3 | 0 |
கேன் வில்லியம்சன் | பிடி- சூர்யகுமார் யாதவ் | மொஹமட் ஷமி | 69 | 73 | 8 | 1 |
டெரில் மிட்செல் | பிடி – ரவீந்தர் ஜடேஜா | மொஹமட் ஷமி | 134 | 119 | 9 | 7 |
ரொம் லெதாம் | L.B.W | மொஹமட் ஷமி | 00 | 02 | 0 | 0 |
கிளென் பிலிப்ஸ் | பிடி – ரவீந்தர் ஜடேஜா | ஜஸ்பிரிட் பும்ரா | 41 | 33 | 4 | 2 |
மார்க் சப்மன் | பிடி – ரவீந்தர் ஜடேஜா | குல்தீப் யாதவ் | 06 | 08 | 0 | 0 |
மிட்செல் சென்ட்னர் | பிடி – ரோஹித் ஷர்மா | மொஹமட் சிராஜ் | 09 | 10 | 0 | 0 |
டிம் சௌதி | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் ஷமி | 00 | 01 | 0 | 0 |
டிரென்ட் போல்ட் | 01 | 05 | 0 | 0 | ||
லூக்கி பெர்குசன் | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் ஷமி | 06 | 03 | 0 | 1 |
உதிரிகள் | 10 | |||||
ஓவர் 48.5 | விக்கெட் 10 | மொத்தம் | 327 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட் | விக் |
ஜஸ்பிரிட் பும்ரா | 10 | 01 | 64 | 01 |
மொஹமட் சிராஜ் | 09 | 00 | 78 | 01 |
மொஹமட் ஷமி | 9.5 | 00 | 57 | 07 |
ரவீந்தர் ஜடேஜா | 10 | 00 | 63 | 00 |
குல்தீப் யாதவ் | 10 | 00 | 55 | 01 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரோஹித் ஷர்மா | பிடி – கேன் வில்லியம்சன் | டிம் சௌதி | 47 | 29 | 4 | 4 |
சுப்மன் கில் | 80 | 66 | 8 | 3 | ||
விராத் கோலி | பிடி- டெவோன் கொன்வே | டிம் சௌதி | 117 | 113 | 9 | 2 |
ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி- டெரில் மிட்செல் | டிரென்ட் போல்ட் | 105 | 70 | 4 | 8 |
லோகேஷ் ராகுல் | 39 | 20 | 5 | 2 | ||
சூர்யகுமார் யாதவ் | பிடி- கிளென் பிலிப்ஸ் | டிம் சௌதி | 01 | 02 | 0 | 0 |
உதிரிகள் | 08 | |||||
ஓவர் 50 | விக்கெட் 04 | மொத்தம் | 397 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
டிரென்ட் போல்ட் | 10 | 00 | 86 | 01 |
டிம் சௌதி | 10 | 00 | 100 | 03 |
மிட்செல் சென்ட்னர் | 10 | 01 | 51 | 00 |
லூக்கி பெர்குசன் | 08 | 00 | 65 | 00 |
ரச்சின் ரவீந்திரா | 07 | 00 | 60 | 00 |
கிளென் பிலிப்ஸ் | 05 | 00 | 33 | 00 |