பதுளை நோக்கி பயணித்த ரயில் மீது கற்பாறை சரிவு!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில் மீது ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (17.11) அதிகாலை பாரிய பாறாங்கல் ஒன்று விழுந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

​​மலை உச்சியில் இருந்த பாரிய பாறாங்கல் ஒன்று 156/13 மைல் தூணுக்கு அருகில் திடீரென இரவு தபால் புகையிரதத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் அந்த ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ரயில் பாதை மற்றும் இன்ஜினுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply