சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரிய சிகரெட் தொகை கண்டுபிடிப்பு!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.1,300 மில்லியன் பெறுமதிமிக்க 10 மில்லயன் சிகரெட் குச்சிகள் அடங்கிய 40 அடி கொள்கலன் பாரவூர்தி ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) கைப்பற்றியுள்ளனர்.

வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இந்த சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிராண்ட்பாஸில் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் குறித்த கொள்கலனை விசேட அதிரடிப்படையினர் இடைமறித்துள்ளனர்.

குறித்த கொள்கலனை பரிசோதித்ததில், 10,420,000 சிகரெட் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இடஙக சட்டவிரோத இறக்குமதி நடவடிக்கை தொடர்பில் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply