பாரளுமன்ற பொது நிறுவன குழுவின் சகல கூட்டங்களும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கோப் குழுவின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும், தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குமாறு ஏதிர்கட்சியினர் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பை இன்று(17.11) பாரளுமன்றத்தில் வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகசபையின் விசாரணையின் போது வாயை மூடுமாறு சமிக்ஞை வழங்கினார் என வீடியோ வெளியானது. அத்தோடு அவரது மகன் கோப் குழுவின் கூட்டத்தில் பங்குபற்றிய புகைப்பட ஆதாரங்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டு அவரது மகன் கோப் குழுவின் கூட்டத்துக்கு செல்ல முடியுமென்றால் நான் ஏன் செல்லக்கூடாது என கேள்வியெழுப்பியிருந்தார்.
பேராசிரியர் ரஞ்சித் பண்டார கொழும்பு வியாபார பாடசாலை(Colombo Business School) நிறுவனத்தின் தலைவர் எனவும், குறித்த நிறுவனம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் வியாபார ஒப்பந்தம் ஒன்றில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.
பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் விசாரணைகளில் உள்வாங்கப்படக்கூடாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாரளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கே பாரளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.