கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதித்துறைக்கு பாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் போது அதனை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சாதகமான தீர்ப்பு வரும்போது அதனையும் விமர்சிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தீர்மானங்களை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவரை சுட்டிக்காட்டியுள்ளார்.