ஆறாவது தடவையாக அவுஸ்திரேலியா வசமானது உலகக்கிண்ணம்

ஆறாவது தடவையாக அவுஸ்திரேலியா வசமானது உலகக்கிண்ணம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்று ஆறாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

இந்தியா, அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் 241 ஓட்டங்கள் என்ற வெற்றியில்க்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி 1987, 1999,2003,2007,2015 ஆகிய உலகக்கிண்ண தொடர்களில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. இந்த வருட தொடரில் முதலிரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த அவுஸ்திரேலியா அணி அதன் பின்னர் விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது.

இந்தியா அணி 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த முறையே உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தப்போட்டிக்கு முன்னதாக இந்தியா அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று பலமான அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இருப்பினும் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்து இரண்டாமிடத்தை இரண்டாம் தடவையாக பெற்றுள்ளனர். இதற்கு முதல் 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியிடம் இந்தியா அணி தோல்வியடைந்து இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இந்தியா அணியின் தலைவர்ரோஹித் ஷர்மா தாம் முதலில் துடுப்பாட விரும்பியதாக தெரிவித்திருந்தார். அவுஸ்திரேலியா அணி தலைவர் பட் கம்மின்ஸ் சொன்னது போன்று இந்தியாவின் ரசிர்களை அமைதி காக்க வைத்துள்ளது அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு.

இந்தியா அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது. 241 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி முதல் ஓவரை அதிரடியாக ஆரம்பித்தது. இந்த தொடரின் கூடுதலான விக்கெட்களை கைப்பற்றிய மொஹமட் ஷமி இன்று இரண்டாவது பந்துவீச்சாளராக அழைக்கப்பட முதல் பந்திலேயே டேவிட் வோர்னரின் விக்கெட்டினை கைப்பற்றினார். தொடர்ந்து துடுப்பாட வந்த மிச்செல் மார்ஷ் அதிரடி நிகழ்த்த ஓட்டங்கள் வேகமாக அதிகரித்தன. ஐந்தாவது ஓவரில் பும்ரா அவரின் விக்கெட்டினை கைப்பற்ற இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து மிகவும் ஸ்விங் ஆகி சாதக தன்மையை வழங்கியது. இறுக்கமாக பந்துவீச்சு தொடர ஸ்டீவ் ஸ்மித் துரதிஷ்டவமாக ஆட்டமிழந்தார். நடுவர் LBW ஆட்டமிழப்பு வழங்க மறு பரிசீலனை செய்ய கோராமல் வெளியேறினார். மறு பரிசீலனைக்கு கோரியிருந்தால் ஆட்டமிழப்பிலிருந்து தப்பியிருப்பார்.

அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ட்ரவிஷ் ஹெட் விக்கெட்கள் வீழ்த்தப்பட நிதானம் கார்த்து ஓட்டங்களை நகர்த்தி கொண்டு சென்றார். மார்னஸ் லபுஷேன் அரைச்சத இணைப்பட்டத்தை அவரோடு இணைந்து வழங்கினார். அதன் பின்னர் இருவரும் நம்பிக்கையாக ஓட்டங்களை அதிகரிக்க ஆரம்பித்தனர். இந்தியாக பக்கமாக உருவாகிய வாய்ப்பு அவுஸ்திரேலியா பக்கமாக மாறியது. சத இணைப்பாட்டத்தை இருவரும் பகிர்ந்து அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பை இலகு படுத்தினார்கள். ட்ரவிஷ் ஹெட் வேகமாக அடித்தாடா ஆரம்பிக்க இந்தியாவிடமிருந்து வாய்ப்பு முழுமையாக அவுஸ்திரேலியா பக்கமாக மாறியது. ட்ரவிஷ் ஹெட்டின் மிக அபாரமான சதம் அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பை முழுமையாக வழங்கியது. இது அவரின் ஐந்தாவது சதமாகும். 2 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் ஹெட் ஆட்டமிழந்தார்.

முதலில் இந்தியா அணி துடுப்பாட ஆரம்பித்த வேளையில் ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆரம்பித்தார். தடுமாறிய சுப்மன் கில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராத் கோலியும், ரோஹித் ஷர்மாவும் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை வேகமாக உயர்த்தினார்கள். மக்ஸ்வெல்லின் பந்துவீச்சில் அதிரடியாக அடித்தாடிய வேளையில் தேவையற்ற அதிக ஆக்ரோஷம் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழக்க செய்தது. அரைச்சதத வாய்ப்பை இழந்தார் ஷர்மா. அவரின் ஆட்டமிழப்பின் பின்னர் இந்தியாவின் தடுமாற்றம் ஆரம்பித்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வரத்தில் நான்கு ஓட்டத்தை பெற்ற போதும் 3 பந்துகளில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் விராத் கோலி, லோகேஷ் ராகுல் இணைந்து மிக பொறுமையாக துடுப்பாடினார்கள். 98 பந்துகள் 4 ஓட்டங்கள் இன்றி துடுப்பாடினார்கள். இருவரும் 109 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்ற வேளையில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். இது மேலும் இந்தியா அணிக்கு பின்னடைவைவாக மாறிப்போனது. இந்தியா இந்த உலகக்கிண்ண தோடரில் இந்தளவு அழுத்தத்துக்கு உள்ளானது இதுவே முதற் தடவையாக அமைந்து.

ரவீந்தர் ஜடேஜா, லோகேஷ் ராகுலுடன் இணைப்பட்டதை மேற்கொள்ள முயற்சித்த போதும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இன்று இந்தியா அணிக்கும் எதுவுமே சாத்தியமாகவில்லை என்ற நிலை உருவானது. லோகேஷ் ராகுல் அரைச்சதத்தை பூர்த்தி செய்து நிதானமாக துடுப்பாடினார். 36 ஆவது ஓவரில் இறுதி துடுப்பாட்ட ஜோடியாக ராகுல்-சூர்யகுமார் ஆகியோர் இணைந்தனர். அடுத்தடுத்த விக்கெட்கள் இழக்கப்பட 4 ஓட்டங்களை பெற முடியாமல் போனது. 98 பந்துகளின் பின்னர் முதல் நான்கு ஓட்டத்தை பெற்று பின்னர் 76 பந்துகளில் மீண்டும் நான்கு ஓட்டம் பெறப்பட்டது. சூர்யா அந்த நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

இந்தியா அணி சகல போட்டிகளிலும் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை குவித்த வந்த அணி. இன்றே அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் தடுமாறியுள்ளது. லோகேஷ் ராகுல் 41.3 ஓவர்கள் நிறைவில் வெளியேறினார். அதிரடி நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மிக மெதுவான ஆரம்பத்தையே வழங்கினார். அத்தோடு இறுதி நேரத்தில் தான் பந்துகளை எதிர்கொள்ளாமல் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களை எதிர்கொள்ள விட்டமை விக்கெட்கள் இழக்கப்படவும் ஓட்டங்கள் அதிகரிக்காமல் இருக்கவும் காரணமாக அமைந்தது. அதிரடியாக அடித்தாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவரும் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. 10.2 ஒவர்களின் பின்னர் இந்தியா அணி 4, நான்கு ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். சுழற் பந்துவீச்சாளர்கள் இறுக்கமாக ஓட்டங்களை வழங்காமல் பந்துவீசினார்கள். மக்ஸ்வெல் கைப்பற்றிய ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டே இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய விக்கெட். இந்தியா அணி இந்த உலகக்கிண்ண தொடரில் சகல விக்கெட்களையும் இழந்தமை இதுவே முதற் தடவை.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டேவிட் வோர்னர்பிடி – விராத் கோலிமொஹமட் ஷமி070310
ட்ரவிஸ் ஹெட்பிடி -சுப்மன் கில் ஜஸ்பிரிட் பும்ரா137120154
மிற்செல் மார்ஷ்பிடி – லோகேஷ் ராகுல்ஜஸ்பிரிட் பும்ரா151511
ஸ்டீபன் ஸ்மித்L.B.Wஜஸ்பிரிட் பும்ரா040810
மார்னஸ் லபுஷேன்  5811040
க்ளன் மக்ஸ்வெல்      
       
       
       
       
       
உதிரிகள்  18   
ஓவர்  49.3விக்கெட்  03மொத்தம்241   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா09024302
மொஹமட் ஷமி07014701
ரவீந்தர் ஜடேஜா10004300
குல்தீப் யாதவ்10005600
மொஹமட் சிராஜ்06003500
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோஹித் ஷர்மாபிடி – ட்ரவிஸ் ஹெட்க்ளன் மக்ஸ்வெல்473143
சுப்மன் கில்பிடி – அடம் ஷம்பாமிட்செல் ஸ்டார்க்040700
விராத் கோலிBowledபட் கம்மின்ஸ்546340
ஷ்ரேயாஸ் ஐயர்பிடி – ஜோஷ் இங்கிலிஸ்பட் கம்மின்ஸ்040310
லோகேஷ் ராகுல்பிடி – ஜோஷ் இங்கிலிஸ்மிட்செல் ஸ்டார்க்6610710
ரவீந்தர் ஜடேஜாபிடி – ஜோஷ் இங்கிலிஸ்ஜோஸ் ஹெஸல்வூட்092200
சூர்யகுமார் யாதவ்பிடி – ஜோஷ் இங்கிலிஸ்ஜோஸ் ஹெஸல்வூட்182810
மொஹமட் ஷமிபிடி – ஜோஷ் இங்கிலிஸ்மிட்செல் ஸ்டார்க்061010
ஜஸ்பிரிட் பும்ராL.B.Wஅடம் ஷம்பா010300
குல்தீப் யாதவ்Run Out 101800
மொஹமட் சிராஜ்  090810
உதிரிகள்  12   
ஓவர்  50விக்கெட்  10மொத்தம்240   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்10005503
ஜோஸ் ஹெஸல்வூட்10006002
க்ளன் மக்ஸ்வெல்06003501
பட் கம்மின்ஸ்10003202
அடம் ஷம்பா10004301
மிற்செல் மார்ஷ்02000500
ட்ரவிஸ் ஹெட்02000400

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட்,  க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version