ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாக தடை மேலும் நீடிப்பு

விளையாட்டு துறை அமைச்சரினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகசபை நியமிக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியது. குறித்த தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்து. இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக நீதிபதிகள் ஷோபித ராஜகருணா மற்றும் D.N சமரக்கோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்றுடன் நிறைவடையும் இடைக்கால தடை மேலும் இரண்டு தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply