வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

தெதுரு ஓயாவை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அப்பகுதியில் வசிப்பவர்களும், வீதிகளில் பயணிப்பவர்களும் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply