கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது நீரில் மூழ்கி காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பமுனுகம பிரதேசத்திலேயே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜால பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழு சென்ற போது, அவர் கால்வாயில் குதித்து தப்பியோட முயற்சித்துள்ளதுடன், அவரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.