விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ரோப் கேமரா எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்ததில் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்தும், நடிகர் சூர்யா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததமை தொடர்பாகவும் செய்திகள் வெளியான நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து தற்போது அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், ஆதரவுக்கும், வேண்டுதல்களுக்கு நன்றி எனவும் தெரிவித்து அவர் தனது ”X ” தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply