மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்கள் திருட்டு!

மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி என்பனவற்றை முழுமையாக சோதனையிட்ட போதும் குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்ததோட்டாக்கள் எப்படி காணாமல் போனது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என காவல்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவை பொலிஸ் கடமையிலிருந்த உத்தியோகத்தரால் திருடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Social Share

Leave a Reply