வடக்கு சீனாவில் குழந்தைகளிடையே காணப்படும் பரவும் அசாதாரண நிமோனியா அல்லது நுரையீரல் தொற்று போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளர்கள் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களிலும் பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கனடா, இத்தாலி மற்றும் ருமேனியாவில் இருந்தும் இந்த தொற்று கொண்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனால், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான விமான நிலைய சோதனைகளை கடுமையாக்க தாய்வான் அரசு அண்மையில் தீர்மானித்துள்ளது. இந்நிலை தொடருமாயின், மேலும் பல நாடுகளும் விமான நிலைய பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் என எதிர்பாக்கப்பட்டுள்ளது.