புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந் நிலையில், புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் நேற்று(03.12) குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின்போது நன்னீர் மீன்வளர்ப்பு திட்டப் பணிப்பாளர், நெக்டா வடமாகாண பணிப்பாளர், பொறியியலாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது, மீன் உற்பத்தி நிலையத்தின் வளர்ச்சியை மேலும் விணைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது .