தேசிய விளையாட்டு சபையின் தலைவராக வைத்தியர் மையா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ரக்பி வீரரும், ரக்பி சம்மேளன தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். அத்தோடு செயலாளராக விக்கிரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் குறித்த சபைக்கு 15 உறுப்பினர்கள் இன்று(04.12) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சபைக்கு முன்னாள் தடகள வீராங்கனை ஸ்ரீயானி குலவன்ச, மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹொட்டி, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, பண்டுக கீர்த்தினாந்த, அனா புஞ்சிஹேவா, மலிக் காதர், கலாநிதி எஸ்.வி.டி. நாணயக்கார, ஹபீஸ் மார்சோ, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிதத் வெட்டிமுனி, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, அனுராதா இல்லேபெரும, பேராசிரியர் ஷெமல் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் கமல் தேசப்பிரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடமையாற்றி வந்த நிலையில் அவரின் தலைமையிலான குழுவுக்கு பதிலாகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட வேளையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரத்தில் அர்ஜுன ரணதுங்கவையும் இணைத்துக்கொண்டு முன் செல்லவுள்ளதாக கூறியிருந்தார்.