சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த எம். எஸ். முஷாப் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பிரதேசவாசிகள் குறித்த பாடசாலையை முற்றுகையிட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மத்ரஸா பாடசாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.