புத்தளம் கடற்பகுதியில் பட்டலங்குண்டுவ தீவுக்கு அண்மித்த கடலில் கடத்தல்காரர்களால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 27 மற்றும் 35 வயதுடைய கல்பிட்டியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர், மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அனுமதி அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.